என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்யன் கான்"
- பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெப் தொடர் ஒன்றை ஆரியன் கான் எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- வெப் தொடர் அடுத்த வருடமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக தனது முத்திரையை பதித்தவர் ஷாருக் கான். கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி வசூலை கடந்து ஷாருக் கானுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இந்நிலையில் ஷாருக் கானின் 27 வயது மகன் ஆர்யன் கான் திரையுலகில் இயக்குனராக கால் பாதிக்க உள்ளார். பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெப் தொடர் ஒன்றை ஆரியன் கான் எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் அடுத்த வருடமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நடிகராக அல்லாமல் இயக்குநராக அறிமுகமானதை கங்கனா ரனாவத் பாராட்டியுள்ளார்.
"குழந்தைகள் இது மிகவும் நல்லது. திரையுலகக் குடும்பங்களில் இருந்து, மேக்கப் போடவும், உடல் எடையைக் குறைக்கவும், பொம்மையை வளர்க்கவும், தாங்கள் நடிகர்கள் என்று நினைக்கவும் ஆசைப்படுவதைத் தாண்டிச் செல்கிறார்கள். எங்களுக்கு கேமராக்களுக்குப் பின்னால் அதிகமானவர்கள் தேவை. ஆர்யன் இந்த பயணத்தை மேற்கொள்வது நல்லது என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷாருக் கான் அவரது மனைவி கவுரி கான் இணைந்து நடத்தும் ரெட் சில்லிஸ் உடன் நெட்பிளிக்ஸ் இணைந்து தயாரிக்கிறது
- ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான் நெட்பிளிக்ஸில் ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்சிஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக தனது முத்திரையை பதித்தவர் ஷாருக் கான். கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி வசூலை கடந்து ஷாருக் கானுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இந்நிலையில் ஷாருக் கானின் 27 வயது மகன் ஆர்யன் கான் திரையுலகில் இயக்குனராக கால் பாதிக்க உள்ளார். பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெப் தொடர் ஒன்றை ஆரியன் கான் எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வெப் தொடர் அடுத்த வருடமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் தொடரை ஷாருக் கான் அவரது மனைவி கவுரி கான் இணைந்து நடத்தும் ரெட் சில்லிஸ்நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இதன் மூலம் ரெட் சில்லிஸ் - நெட்பிளிக்ஸ் உடன் 6-வது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்சக், கிளாஸ் ஆப் 83, பேட்டல், பார்ட் ஆப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.
Witness Bollywood like never before… on Netflix! ?Presenting Aryan Khan's directorial debut in an all-new series, coming soon!@gaurikhan @iamsrk #AryanKhan @RedChilliesEnt @NetflixIndia pic.twitter.com/UMGTb5FVGI
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 19, 2024
முன்னதாக ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான் நெட்பிளிக்ஸில்ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்சிஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
- ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.
புதுடெல்லி :
மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடியாக அந்த கப்பலில் சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தி பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் (வயது 25) உள்ளிட்டோர் பிடிபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) கண்டுபிடித்தது.
மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது.
இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.
இதன் பேரில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில் என்ன பிடிபட்டது என்பது தெரியவரவில்லை.
சமீர் வான்கடே, கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
- இவர் கதை ஒன்றை எழுதி முடித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் பெயரிடப்படாத கிளாப் போர்ட் மற்றும் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு "கதை எழுதி முடித்துவிட்டேன்.. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்யன் கான்
இதற்கு, " யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துகள். அது எப்போதும் சிறப்பானது." என்று நடிகர் ஷாருக்கான் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்யன்கான் பதிவு
இந்த கதையானது வெப்தொடரின் கதை என்றும் 2023-ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்